Search
  • Follow NativePlanet
Share
» »2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு முன் வரவிருக்கும் சர்வதேச விமான நிலையம்!

2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு முன் வரவிருக்கும் சர்வதேச விமான நிலையம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பழைய நகரமான பிரயாக்ராஜ், 2025 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மகா கும்பமேளாவிற்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மத கூட்டங்களிலும் இந்த மகா கும்பமேளா மிகப்பெரியது.

இதில் உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான இந்து யாத்ரீகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜ் உள்நாட்டு விமான நிலையம், 2025 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பிடித்த மகா கும்பமேளா

யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பிடித்த மகா கும்பமேளா

மகா கும்பமேளா அதன் கலாச்சரம் மற்றும் பாரம்பரியத்தின் காரணமாக யுனெஸ்கோவின் இன்டேன்ஜிபிள் கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆஃப் ஹுயுமானிட்டியில் இடம் பிடித்துள்ளது. இந்த மாபெரும் கும்ப மேளாவில் கலந்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுப்பார்கள்.

இந்த மகா கும்பமேளா நிகழ்வு பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது, இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். அதாவது, இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் 12 வருட இடைவெளிக்குப் பிறகு புனிதமான கூட்டத்தை நடத்துகின்றன. அடுத்த மஹாகும்பமேளா பிரயாக்ராஜில் 2025 இல் மிக பிரமாண்டமாக நடத்தப்படும்.

சர்வதேச விமான நிலையமாக மாறவிருக்கும் பிரயாக்ராஜ் விமான நிலையம்

சர்வதேச விமான நிலையமாக மாறவிருக்கும் பிரயாக்ராஜ் விமான நிலையம்

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான இந்து யாத்ரீகர்களைக் காண நகரம் தயாராகி வருவதால், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு பிரயாக்ராஜ் விமான நிலையம் 2025 ஆம் ஆண்டு மேளாவுக்கு முன் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் சீரான பணிப்பாய்வு மற்றும் சீரான செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அலகாபாத் நகரில் உள்ள ஒரே விமான நிலையமான பிரயாக்ராஜ் விமான நிலையம் இந்திய உள்நாட்டு விமான நிலையங்களின் பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தது.

மகாகும்ப மேளாவில் கலந்து கொள்ள தொலைதூர நாடுகளிலிருந்தும் இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் கடலென குவிவார்கள். கடந்த 2013 இல் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 120 மில்லியன் பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு நடைபெறும் கும்ப மேளாவில் இதைவிட அதிக திரளான மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுவது

உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுவது

"விமான நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தவும், 2025 ஆம் ஆண்டு மகாகும்பத்திற்கு முன்னதாக சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது." என உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.

பிரயாக்ராஜ் மிகப்பெரிய சுற்றுலாத் திறனைக் கொண்டிருப்பதாகவும், சிவபெருமானின் பக்தர்கள் எளிதில் செல்லக்கூடிய வகையில் "கன்வர் பாதை" அமைக்க அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இப்போது பிரயாக்ராஜ் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக இருப்பதால், இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரும் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு பயணம் எளிதாக அமையும்!

Read more about: allahabad uttar pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X