Search
  • Follow NativePlanet
Share
» »சர்வதேச யோகா தினத்தன்று நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

சர்வதேச யோகா தினத்தன்று நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

யோகா ஒரு பழங்கால நெறிமுறையாக உடல் மற்றும் மன நலத்திற்காக நீங்கள் பின்பற்றக்கூடிய சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும். நேர்த்தியான உடல் தோரணைகள் மற்றும் தியானத்தின் கலவையாக, யோகா, மனம், உடல் மற்றும் ஆன்மாவின் இணக்கத்தை அடைய உதவுகிறது. யோகாவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுப்படுகிறது.

ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தப்படி "மனிதகுலத்திற்கான யோகா" என்ற தீம் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய மேம்பாட்டிற்காக யோகா சமூகத்தை செயல்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த தீம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி கர்நாடகாவில் உள்ள மைசூர் நகரம் 21 ஜூன் 2022 அன்று முக்கிய நிகழ்வை நடத்த தயாராக உள்ளது.மேலும் யோகா மற்றும் தியானம் செய்வதற்கு இந்தியாவில் எண்ணற்ற இடங்கள் உள்ளன. அவற்றின் குறுகிய பட்டியல் உங்களுக்காக இதோ!

rishikesh

ரிஷிகேஷ்:

நீங்கள் யோகா பிரியராக இருந்தால் உலகின் யோகா தலைநகரம் என்று பிரபலமாக அறியப்படும் ரிஷிகேஷைத் தான் நீங்கள் முதலில் பார்வையிட வேண்டும். வட மாநிலமான உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் ஏராளமான இயற்கை அழகுடன் வீற்றிரிக்கிறது. யோகா மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மீகப் பக்கத்தை இணைக்க விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு ஒரு சரியான அமைப்பை உருவாக்கும்.

ரிஷிகேஷ் வழியாக பாயும் கங்கை நதி ஓரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் நீங்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். பரமார்த் நிகேதன், ஓம்காரானந்த கங்கா சதன், சிவானந்தா ஆசிரமம், சாதனா மந்திர், யோகா நிகேதன், ஆனந்த் பிரகாஷ் ஆசிரமம் மற்றும் அபூர்வ யோகா அகாடமி ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.

goa

ஆரோவில்:

புதுச்சேரிக்கு மிக அருகில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகான ஆரோவில் அதன் அமைதிக்காகவும் அழகுக்காகவும் மிகவும் பிரபலமானது எனலாம். இந்த இடம் மரியாதைக்குரிய மாத்ரிமந்திர் அல்லது தெய்வீக அன்னையின் கோவிலுக்காக அறியப்படுகிறது. நீங்கள் ஆன்மீகத்தை தேடுபவராக இருந்தால், ஸ்ரீ அரவிந்தோ மற்றும் தி மதர் மிர்ரா அல்ஃபாஸா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த யோகா பயிற்சியில் ஈடுபடலாம்.
சான்சிய யோகா, ஸ்ரீ மா ஸ்கூல் ஆஃப் டிரான்ஸ்ஃபார்மேஷனல் யோகா, வெரிட், அரா விழிப்புணர்வு ஆராய்ச்சி மையம், சீதா கலாச்சார மையம் ஆகியவை இங்குள்ள சிறந்த யோகா மையங்களாகும்.

hyderbad

கோவா:

கோவா அதன் அழகான கடற்கரைகளுக்கும், சுவையான உணவுகளுக்கும், முடிவில்லா ஷாப்பிங்கிற்கு மட்டுமே பிரபலம் என்று நீங்கள் நினைத்தால் தவறு. நமது மனதையும் உடலையும் ஆசவாசப்படுத்தும் யோகா மற்றும் ஆயுர்வேத பயிற்சிகள் கோவாவில் மிகவும் பிரபலம். ஆஷியானா, லோட்டஸ் நேட்சர் கேர், பர்பிள் வேலி யோகா ரிட்ரீட், யோகா மேஜிக் ஈகோ ரிட்ரீட், பேம்பு யோகா ரிட்ரீட், லிட்டில் கோவ் யோகா ரிட்ரீட் ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.

aveolli

மைசூர்:

நவீன யோகாவின் பிறப்பிடமாக அறியப்படும் மைசூர் ஒவ்வொரு யோகா ஆர்வலரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடத்தில் ஒன்றாகும். அஸ்தங்கா யோகாவின் பிறப்பிடமாக கருதப்படும் மைசூர், உலகம் முழுவதும் உள்ள அஸ்தங்கா பயிற்சியாளர்களை ஈர்க்கிறது. மைசூர் ஹத யோகா கேந்திரா, அஷ்டாங்க சாதனா யோக சாலா, யோகதந்திர அனுஷ்டானம், இந்தியா யோகா, சரத் யோகா மையம், மைசூர் மண்டல யோகசாலை, சைதன்ய யோகா கேந்திரா, சமயக் யோகா மைசூர் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற யோகா மையங்களாகும். இங்கு நீங்கள் யோகா சூத்திரங்கள் மற்றும் முதுகு வளைத்தல், ஷட்க்ரியா, ஹதா மற்றும் பிராணயாமா ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

gokarna

தர்மஷாலா:

dharmashala

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலமான தர்மஷாலா யோகா பிரியர்களிடையே மிகவும் பிரபலமான இடமாகும். புனித தலாய் லாமா உட்பட பல புத்த துறவிகள் வசிக்கும் இந்த இடம் ஒரு தனித்துவமான ஆன்மீக அதிர்வைக் கொண்டுள்ளது. இங்குள்ள யோகா மற்றும் தியான மையங்களில் சிறிது நேரம் தங்குவது கூட உங்கள் வாழ்க்கையை மாற்றும். இதுவே இந்த இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலத்தை ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமானதாக ஆக்குகிறது. ஹிமாலயன் ஐயங்கார் யோகா மையம், சிவ தர்ஷன் யோகா பள்ளி, அபினம் யோகா, ஸ்ரீ ஹரி யோகா, சர்வகுண யோகா, ராஜ் யோகா பள்ளி மற்றும் சித்தி யோகா ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.
நீங்கள் ஆரோக்கியமான வாழ்வில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்து, உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த விரும்பினால், யோகா மற்றும் தியானத்தை தவறாமல் பயிற்சி செய்யுங்கள், அது உங்கள் வாழ்வில் பல அதிசயங்களைச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X