Search
  • Follow NativePlanet
Share
» »இனி பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தை எளிதில் அடையலாம் – விவரங்கள் இங்கே!

இனி பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தை எளிதில் அடையலாம் – விவரங்கள் இங்கே!

2021 இல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. ஆம்! பெங்களூரு விமான நிலைய ரயில் நிலையம் கெம்பெகவுடா விமான நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் பயணிகள் விமான முனையத்திற்கு செல்ல ஷட்டில் பேருந்து சேவைகளை நம்பியிருக்க வேண்டியதாக இருந்தது.

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் மக்களுக்கும், விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிற்கு ஏற்பவும் தென்மேற்கு ரயில்வே 2021 ஆம் ஆண்டில் டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில் சேவையை அறிமுகம் செய்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினாலும், விமான சேவை கட்டுக்குள் இருந்ததாலும் சொற்பமான எண்ணிக்கையில்யிலேயே மக்கள் பயணம் செய்தனர்.

traintokempgowdaairport-1

ஒவ்வொரு நாளும் சுமார் 20 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கினர். ஜனவரி 4 முதல் ஏப்ரல் 20, 2021 வரை 2,098 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டுது. தென்மேற்கு ரயில்வேயிற்கு 20,830 ரூபாய் மட்டுமே வருவாய் வந்தது. தற்போது அனைத்து சற்று சீராகி விட்டமையால், மீண்டும் சில மாற்றங்களுடன் ரயில் சேவையை தொடங்க எண்ணினர்.

அதன்படி, பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களில் இருந்து கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஐந்து மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்களை வெள்ளிக்கிழமை முதல் இயக்குவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

bangaluru airport train services-2

புதிய மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்கள் வழக்கமான ரயில்களை விட அதிக சராசரி வேகம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் உட்பட நன்மைகளை வழங்குகின்றன என்று தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். "கடந்த முறை இயக்கப்பட்ட டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில் சேவைகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. ஒருவேளை கோவிட் காரணமாக இருக்கலாம். இந்த முறை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதிர்வெண்ணை அதிகரித்துள்ளோம் மற்றும் நேரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களிடம் இருந்து சிறந்த வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம், "என்று தென்மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அனீஷ் ஹெக்டே கூறினார்.

தேவனஹள்ளி - பெங்களூரு கண்டோன்மென்ட், பெங்களூரு - தேவனஹள்ளி, தேவனஹள்ளி - யெலஹங்கா ஆகிய ரயில்கள் கெம்பெகவுடா சர்வதேச விமான நிலைய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் 35 ரூபாய் ஆகும்.

"ரயில் சேவைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது நல்ல முன்னேற்றம். மற்ற நேரங்களிலும் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தென்மேற்கு ரயில்வே ஆராய வேண்டும். இது தவிர, நகரின் மற்ற இடங்களிலிருந்தும் ரயில்களை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது. யஷ்வந்த்பூர், ஓசூர், ஒயிட்ஃபீல்டு மற்றும் பிற இடங்களிலிருந்து சர்வதேச கெம்பெகவுடா விமான நிலையத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும்" என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே ஆர்வலர் கே.என். கிருஷ்ணபிரசாத் கூறினார்.

ஆகவே நீங்களும் இனி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் போது இந்த ரயில் சேவைகளை இனி உபயோகித்துக் கொள்ளலாம்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X