Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நீலம்பூர் » வானிலை

நீலம்பூர் வானிலை

அதிக வெப்பம் நிலவும் கோடைக்காலம் மற்றும் அதிக மழைப்பொழிவை கொண்டுள்ள மழைக்காலம் என்பதாக நீலம்பூர் பருவநிலை காணப்படுகிறது. இந்த இரண்டு பருவங்களுமே பயிர்த்தோட்டங்களுக்கு விஜயம் செய்யவும் நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்கவும் ஏற்றதாக இல்லை. எனவே குளிர்காலமே நீலம்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. மழைக்காலம் முடிந்த பிறகு புதிய பசுமையுடன் இயற்கை ஜொலிக்கும் காலத்திலும் நீலம்பூருக்கு விஜயம் செய்து ரசிக்கலாம்.

கோடைகாலம்

நீலம்பூர் சுற்றுலாப்பிரதேசத்தில் கோடைக்காலமானது கடுமையான வெப்பம் நிறைந்த சூழலைக் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 22° C முதல் 35° C வரை வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலம் இப்பகுதிக்கு விஜயம் செய்து ரசிக்க ஏற்றதாக இல்லை.

மழைக்காலம்

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைந்திருப்பதால் நீலம்பூர் சுற்றுலாப்பிரதேசம் மழைக்காலத்தில் பரவலான தீவிர மழையை பெறுகிறது. ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையும் இங்கு பொழிகிறது. வெளிச்சுற்றுலாவுக்கு மழை மிக இடைஞ்சலாக இருக்கும் என்பதால் மழைக்காலமும் நீலம்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இல்லை.

குளிர்காலம்

நீலம்பூர் சுற்றுலாப்பிரதேசமானது குளிர்காலத்தின் இனிமையான குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. மிதமான மற்றும் அதிக குளிரும் இக்காலத்தில் நிலவுகிறது. டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. பகலில் அதிகபட்சமாக வெப்பநிலை 32° C வரையும், இரவில் குறைந்தபட்சமாக 16° C வரை குறைந்தும் காணப்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது பயணிகள் குளிர்காலத்துக்கான உடைகளை மறக்காமல் கொண்டு செல்வது நல்லது.