Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» நிருத்ய கிராமம்

நிருத்ய கிராமம் - நாட்டியத்தின் இதயத் துடிப்பு

10

இந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், ஹெசர்கட்டாவுக்கு அருகில் அமைந்துள்ளது.

நிருத்ய கிராமத்தை நிர்மாணித்தவர் இந்தியாவின் பிரபல ஒடிசி கலைஞர் ப்ரோத்திமா பேடி ஆவார். பாரதத்தின் பழைய குருகுல பாணியில் ஒரு நடன கிராமத்தை உருவாக்க எண்ணிய அந்த ஒப்பற்ற கலைஞரின் கனவு 1990-ல் நிறைவேறியது.

இந்த நடன கிராமத்தை அப்போதைய பிரதமர் வீ.பி.சிங் அவர்கள் திறந்து வைத்தார். இங்கு வரும் பயணிகள் நிருத்ய கிராமத்தின் நடனக்குழுவையும், கிராமத்தின் எழில் தோற்றத்தையும் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள்.அதோடு நிருத்ய கிராமத்தை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களின் இயற்கையான அழகுக்கு எவருமே அடிமையாக விடுவார்.

நிருத்ய கிராமத்தை வடிவமைத்தவர் இந்தியாவை சேர்ந்த பிரபல கட்டிடக் கலை நிபுணர் ஜெரார்ட் டா குன்ஹா. இதன் பசுமை, திறந்த வெளி, மண் வீடுகள் எல்லாம் சேர்ந்து நிருத்ய கிராமத்துக்கு ஒரு நாட்டுப்புற சாயலை கொடுத்திருக்கிறது.

இங்கு வசந்த காலத்தின் வருகையை கொண்டாடும் விதமாக வசந்தஹப்பா என்ற கலைவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது உலகம் முழுவதிலுமிருந்து வரும் நடனக் கலைஞர்கள் நிருத்ய கிராமத்தின் ஏம்பி அரங்கத்தில் நடனமாடுவார்கள்.

நிருத்ய கிராமம் வரும் பயணிகள், அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெசர்கட்டா ஏரியை கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இந்த ஏரி இயற்கையாக உருவானதன்றி, மனித உழைப்பினால் உருவானது.1894-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இது 1124 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியின் முக்கிய நீர்தேக்கமாக விளங்கி வருகிறது.

நிருத்ய கிராமம் சிறப்பு

நிருத்ய கிராமம் வானிலை

சிறந்த காலநிலை நிருத்ய கிராமம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நிருத்ய கிராமம்

  • சாலை வழியாக
    பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் நிருத்ய கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் பெங்களூரிலிருந்து முன் பணம் பெற்று இயங்கும் வாடகை கார்களிலும் பயணிகள் நிருத்ய கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நிருத்ய கிராமத்திலிருந்து பெங்களூர் ரயில் நிலையம் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் பெங்களூரை அடைந்தவுடன் அங்கிருந்து பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ எளிதாக நிருத்ய கிராமத்தை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நிருத்ய கிராமத்திலிருந்து பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் உலகின் எந்த மூலையிலிருந்தும் நிருத்ய கிராமத்திற்கு சுலபமாக வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun