Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நுஹ் » வானிலை

நுஹ் வானிலை

நுஹ் நகரத்தில் அதிகப்படியான வானிலையே எப்போதும் நிலவும். கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் குளிர் காலம் கடும் குளிருடன் இருக்கும். செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு வானிலை இனிமையுடன் இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

கோடைகாலம்

நுஹ்ஹில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இம்மாதங்களில் அதிகபட்ச வெப்ப நிலையாக 38° செல்சியஸ் வரை தட்பவெப்ப நிலை நீடிப்பதால் வெயில் அதிகமாக இருக்கும். மே மாதத்தில் இங்கு வெயில் மிகவும் உக்கிரமாக மக்களை வாட்டி வதைக்கிறது.

மழைக்காலம்

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கே மழைக்காலம் நீடிக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் அதிகப்படியான மழை பெய்யக்கூடும். இந்நேரத்தில் மழை காரணமாக இங்கு சுற்றிப் பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் மழையினால் வெயிலின் கொடுமையிலிருந்து விடிவு பிறப்பதால் இவ்வூர் மக்கள் இக்காலத்தில் நிம்மதி பெருமூச்சு விடுவர்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர் காலம் நிலவும். டிசம்பர் மாதத்தில் தான் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும்.