Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூர்புர் » ஈர்க்கும் இடங்கள் » நூர்புர் கோட்டை

நூர்புர் கோட்டை, நூர்புர்

8

நூர்புர் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்கும் இந்த நூர்புர் கோட்டை 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பதானிய வம்சத்தாரால் இது எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த கோட்டைப்பகுதியிலிருந்து சக்கி ஆற்றின் துண ஆறான ஜபர் குட் எனும் சிற்றாறின் அழகை பார்த்து ரசிக்கலாம். கோட்டையின் சுவர்ப்பகுதிகளில் சில ஓவியங்களையும் பயணிகள் பார்க்கலாம்.

குறிப்பாக வடமேற்கு சுவர்ப்பகுதியில் சில விலங்கு உருவங்களின் பொறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றோடு மனிதர்கள், குழந்தைகள், அரசர்கள், கடவுளர்கள், தேவியர் மற்றும் பறவைகளின் உருவங்கள் ஆகியவற்றையும் இங்கு பார்த்து ரசிக்கலாம்.

இந்த கோட்டையின் உள்ளேயே கிருஷ்ண பஹவானுக்கான பிரிஜ் ராஜ் ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. இங்குள்ள கருப்பு சலவைக்கல் விக்கிரகம் ராஜா ஜகத் சிங் ஆட்சியின் போது ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

1905ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இக்கோட்டை தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் இதன் சில பகுதிகளின் அழிவுக்கு ஆங்கிலேயர்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

எப்படியிருப்பினும் இந்த கோட்டை இன்றும் வரலாற்றின் சுவடுகளை பிரதிபலிப்பதால் இது அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri

Near by City