நூர்புர் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்து ரசிக்க செப்டம்பர் முதல் ஜூன் வரையான மாதங்கள் உகந்தவையாக உள்ளன. கோடைக்காலத்தில் இங்கு டிரெக்கிங் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் கோயில்கள் போன்ற உள் சுற்றுலா அம்சங்களை ரசிக்க ஏற்றதாக உள்ளன. பனி படர்ந்த மலைகளை ரசிக்க விரும்பும் பயணிகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான பருவத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.
(மார்ச் முதல் ஜூன் வரை) : நூர்புர் சுற்றுலாத்தலத்தில் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 22°C முதல் 38°C வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பருவம் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : நூர்புர் சுற்றுலாத்தலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பிரதேசம் கடும் மழைப்பொழிவை பெறுகிறது. மழைக்காலத்தில் நூர்புர் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் அதற்கான உடைகள் மற்றும் முன் தயாரிப்புகளோடு செல்வது நல்லது.
( டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : நூர்புர் சுற்றுலாத்தலத்தில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் கடும் குளிர் மற்றும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. வெப்பநிலையும் 4°C வரை குறைந்து காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்படுவதுடன் சூழலும் பனிமூட்ட கலங்கலுடன் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.