Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஊட்டி » வானிலை

ஊட்டி வானிலை

அக்டோபர், மார்ச் மற்றும் ஏப்ரல் ஊட்டிக்கு வருகை தர சிறந்த மாதங்களாக கருதப்படுகின்றன. இந்த மாதங்களில், வெப்பநிலை 25 டிகிரியில் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் உள்ளதால், பயணிகள் ஊர் சுற்றிப் பார்க்க சுலபமாக இருக்கும் . இந்த மூன்று மாதங்களில் இரவுகள் கூட சுகமாக இருப்பதால் ஒரு கணமான ஆடை வைத்திருக்கத் தேவையில்லை.

கோடைகாலம்

ஊட்டியில் கோடை மார்ச் இறுதியில் தொடங்கி மே முதல் வாரம் வரை தொடர்கிறது. எனினும், கோடை வெப்பம் தென்னிந்தியாவின் மற்ற இடங்களப் போல் இல்லை. கோடை வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் தாண்டி போகாது. காலை வேளை சில சமயம் கொச்ஞம் சூடாக இருக்கலாம் ஆனால் இரவுகள் பெரும்பாலும் குளிராகவும் இதமாகவும் இருக்கும்.

மழைக்காலம்

ஊட்டியில் பருவமழை மே முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். மழை காலத்தில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இருக்கும். இங்கு பலத்த மழை பொழிகிறது. எனினும், மழையால் சரிவுகள் பசுமையாக காட்சி அளிக்கும்.

குளிர்காலம்

ஊட்டியின் குளிர் மாதங்கள் மிகவும் குளிராகவும் வறண்டும் இருக்கும். பலத்த காற்று இருப்பதால், கணமான ஆடைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போவது கடினம் . குளிர்காலம் அக்டோபர் மாதம் தொடங்கி, ஜனவரி, பிப்ரவரி வரை நீடிக்கும். இரவில் வெட்பநிலை சுமார் 4 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் இருக்கும்.