சாத்ரிகள், ஓர்ச்சா

அடிப்படையில் ராஜ சமாதிகளான “சாத்ரிகள்” ஓர்ச்சாவின் நதியின் புறத்தே அமைந்து, வருவோரின் கவனத்தை ஈர்க்கக்கூடியனவாய் உள்ளன. இது போன்ற சுமார் பதினான்கு நினைவுச் சின்னங்கள் பெட்வா நதியில் உள்ள கஞ்சன் படித்துறையோரத்தில் அமைந்துள்ளன.

ஓர்ச்சாவின் ஆட்சியாளர்களை நினைவு கூரும் விதமாக எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னங்கள் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த சாத்ரிகள் உண்மையில் பந்தேலா ராஜாக்களை கௌரவப்படுத்தும் நோக்கில் பந்தல்கண்ட் பாணிகளைத் தழுவி கட்டுப்பட்டுள்ளன.

பொதுவாக, இந்த கட்டுமானங்களைக் கண்ணுற்ற காலகட்டம், “பொற் சகாப்தம்” என்று கூறப்படுகிறது. சூரிய ஒளியில், இந்த கட்டிடங்கள் நதி நீரில் பிரதிபலிப்பதைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்.

உயர்த்தப்பட்ட நடைமேடைகளில், தூண்களை ஆதரவாகக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சாத்ரிகள், வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதொரு வசீகரமான அழகைக் கொண்டுள்ளன.

குறுகலான ஒரு பாலத்திலிருந்து நன்றாக பார்க்கக்கூடியனவாகிய இந்த சாத்ரிகள், ஓர்ச்சா வரும் பயணிகள் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும். நதியின் இப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் கண்டிப்பாக ஒரு மகத்தான அனுபவத்தைப் பெறலாம்.

Please Wait while comments are loading...