Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓர்ச்சா » வானிலை

ஓர்ச்சா வானிலை

குளிர்காலம் நிலவும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான காலமே ஓர்ச்சா செல்ல மிக உகந்த காலகட்டம் ஆகும். ஓர்ச்சாவை சுற்றிப்பார்க்க ஏதுவாக இருக்கக்கூடியவையான மேற்கூறிய மாதங்களே பெரும்பாலும் இங்கு செல்வதற்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. மேலும், குளிர்காலத்தின் போது தான் இங்கு அநேக திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

கோடைகாலம்

ஓர்ச்சாவில் கோடைகாலம் மிகுந்த வெப்பமாகவும், சுமார் 48 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய வெப்பநிலையுடனும் காணப்படும். கோடை மாதங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆகும். கோடைகாலத்தின் போது ஓர்ச்சா செல்ல சுற்றுலாப் பயணிகள் அறிவுறத்தப்படுவதில்லை. ஆனால் பலாஷ் பூக்கள் பூக்கும் அழகைக் கண்டு ரசிக்கும் பொருட்டு ஏராளமான பயணிகள் இங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் வருகின்றனர். கோடைகாலத்தின் போது இங்கு வரும் பயணிகள் பருத்தி ஆடைகளைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை அதன் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. இச்சமயத்தின் போது இங்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும். இக்காலத்தின் போது ஓர்ச்சாவிற்கு வருகை தரலாம் என்றாலும் பொதுவாக இச்சமயத்தில் அனைத்து இயக்கங்கள் மற்றும் சுற்றிப்பார்த்தலில் ஒரு தேக்கநிலை நிலவும்; ஆதலால் இக்காலத்தின் போது இங்கு செல்ல பரிந்துரைக்கப்படுவதில்லை. சுற்றுலாப் பயணிகள், மழைக்கோட்டுகள் மற்றும் குடைகளை கையோடு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குளிர்காலம்

ஓர்ச்சாவில் குளிர்காலம் கடுமையாக இல்லாமல் சுமார் 9 டிகிரி செல்சியஸிலிருந்து 25 டிகிரி செல்சியஸ் வரை வேறுபடும் வெப்பநிலையுடன் காணப்படுகிறது. குளிர்ச்சியான மற்றும் இனிமையான வானிலை நிலவும் குளிர்காலங்களின் போது ஓர்ச்சா வரும் சுற்றுலாப் பயணிகள் அற்புதமான ஒரு அனுபவத்தைப் பெறுகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே குளிர்கால மாதங்களாகும். ஓர்ச்சாவை சுற்றிப் பார்க்க இக்காலமே சாலச் சிறந்ததாகும்.