Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலக்காடு » வானிலை

பாலக்காடு வானிலை

பாலக்காடு நகருக்கு அதன் கோடை காலம் மற்றும் மழைக் காலங்களை தவிர எப்போது வேண்டுமானாலும் சுற்றுலா வரலாம். அதுவும் மழைக் காலம் முடிவடைந்த பின்னர் அருவிகள் மற்றும் சரணாலயங்களை சுற்றிப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. மேலும் கல்பாத்தி தேர்த்திருவிழாவை காண விரும்புபவர்கள் நவம்பர் மாதத்தில் பாலக்காடு சுற்றுலா வருவதுதான் சிறப்பானதாக இருக்கும். அதோடு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களிலும் பாலக்காடு நகருக்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மை வரை) : பாலக்காடு நகரின் கோடை காலங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக பதிவாகும். இந்தக் காலங்களில் வெயில் சுட்டெரிப்பதால் கோடை காலங்களில் பாலக்காடு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பாலக்காடு நகரின் மழைக் காலங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு இருக்கும். எனவே சுற்றுலாப் பயணிகள் மழைக் காலங்களில் பாலக்காடு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பாலக்காடு நகரின் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை மலைக் குன்றுகள் சார்ந்த பகுதிகளை சுற்றிப் பார்பதற்கும், நடைபயணம் செல்வதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.