Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழனி » வானிலை

பழனி வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் பழனிக்குச் செல்வது மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இந்த காலத்தில் இங்கு வெப்பம் அதிகமாக இருக்காது. மிதமாக இருக்கும். மேலும் இந்த காலத்தில்தான் தைப்பூசம், பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

கோடைகாலம்

கோடை காலத்தில் அதாவது மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பழனியில் மிகவும் அதிகமான வெப்பம் இருக்கும். அதனால் கோடை காலத்தில் பழனிக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

பழனியின் மழைக்காலத்தில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையுள்ள காலத்தில் சுமாரான மழைப் பொழிவு இருக்கும். இந்த மழைக் காலத்தில் பழனியில் வெப்பம் சற்று தணிந்து காணப்படும்.

குளிர்காலம்

மழைக் காலத்திற்குப் பின்வரும் குளிர் காலத்தில் பழனியில் தட்ப வெப்பம் மிதமாக இருக்கும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள இந்த குளிர் காலத்தில் வெப்பம் 21 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும். இந்த காலத்தில்தான் பழனியல் பல திருவிழாக்ககள் கொண்டாடப்படுகின்றன. எனவே குளிர் காலத்தில் பழனிக்கு சுற்றுலா வருவது இன்பகரமான அனுபவமாக இருக்கும்.