Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலன்பூர் » வானிலை

பாலன்பூர் வானிலை

பாலன்பூர் வானிலை மழைகாலத்தில் மிக இதமாக உள்ளது. மழைகாலத்தில் இங்கு மிதமான மழை பொழிகிறது. எனினும், இங்கு  கோடைகாலம் மிகவும் வெப்பமானது மற்றும் குளிர்காலம் மிகச் கடுமையானது. குளிர்காலத்தில் கடுமையான குளிர் நிலவும்.

கோடைகாலம்

கோடை காலத்தில் பாலன்பூரில் ஒரு வெப்பமான மற்றும் மிக வறண்ட வானிலையே நிலவும். மேலும் கோடை காலத்தில் இங்கு சூடான மணல் காற்றும் வீசுகிறது. இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் ஜூன் வரை நீடிக்கிறது. கோடை காலத்தில் பாலன்பூரின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 42 மற்றும் 27 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.

மழைக்காலம்

பாலன்பூர், பருவமழையின்  போது மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. மேலும் இங்கு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெப்பநிலை கணிசமாக குறைந்து விடுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் பாலன்பூரில் குளிர்ந்த வெப்பநிலையே நிலவும். குளிர்காலங்களான  அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பாலன்பூரின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 22 மற்றும் 5 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.