Search
  • Follow NativePlanet
Share

பல்வால் - பருத்தி மையம்!

9

ஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த பல்வாசூர் என்ற அசுரனின் பெயரை கொண்டுள்ளது இந்த நகரம். பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்த அரசவை பற்றி மகாபாரதத்தில் கூறியுள்ள இடத்தில் பல்வால் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.  பல்வாசூர் அசுரன் கிருஷ்ணா பரமாத்மாவின் சகோதரனான பலராமால் கொல்லப்பட்டான். விக்ரமாதித்யா அரசரும் இங்கே ஆட்சி செய்துள்ளார்.

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்த இடம் பஞ்சாப் மற்றும் குர்கான் என இரண்டு இடங்களுக்கும் சொந்தமாக இருந்தது. பல்வாலில் இருந்து பல பேர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளதால், இந்த இடம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு ஒவ்வொரு வருடமும் பல்தேவ் சட் கா மேளா என்ற திருவிழா நடைபெறும். பலராமிற்காக தௌஜி கோவில் என்ற ஒரு கோவில் இங்குள்ளது. இது பல்வாலிலுள்ள முனிசிபல் சௌக்கிற்கு அருகில் அமைந்துள்ளது.

நம் நாட்டின் பஞ்சு உற்பத்தியில் முக்கியமான நகரமாக இது விளங்குகிறது. இங்கிருந்து நாடு முழுவதும் பஞ்சு அனுப்பப்படுகிறது.

பல்வால் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

புகழ் பெற்ற ஹிந்து கோவிலான பஞ்சவடி கோவில் இங்கு தான் உள்ளது. இது ஹிந்து மதத்தின் முக்கிய குறியீடாக விளங்குகிறது. பகவான் பரசுராம் மந்திர் குலேனா, ஜங்கேஷ்வர் மந்திர், தௌ ஜி மந்திர், கமெட்டி சௌக்கிலுள்ள தேவி கோவில், ஷ்ரதானந்தா பூங்கா, D பூங்கா, டிகோனா பூங்கா, பஞ்சாயத் பவன் போன்ற சில முக்கிய இடங்களும் இங்கு உள்ளது. கில்லி வாலா பூங்கா, டன்கி வாலா பூங்கா, பல் பவன், டி.ஜி. கான் ஹிந்து, தௌ தேவி லால் பூங்கா (நகர பூங்கா), தசரா மைதானம் பூங்கா மற்றும் ஹுடா பூங்கா என பல பூங்காக்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன.

பல்வால் வானிலை

மழைக்காலத்தை தவிர மற்ற நேரங்களில் பல்வாலின் வானிலை வறட்சியாக இருக்கும்.

பல்வாலை அடைவது எப்படி?

பல்வாலுக்கு சாலை, இரயில் மற்றும் விமானம் வழியாக சுலபமாக வந்தடையலாம்.

பல்வால் சிறப்பு

பல்வால் வானிலை

சிறந்த காலநிலை பல்வால்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பல்வால்

  • சாலை வழியாக
    பல்வால் தேசிய நெடுஞ்சாலை 2-ல் இருப்பதால் இங்கு சீரான பேருந்து சேவைகள் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பல்வாலுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையமாக ஃபரிதாபாத் ரயில் நிலையம் அறியப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பல்வாலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் டெல்லியில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed