Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாங்காங் » வானிலை

பாங்காங் வானிலை

பாங்காங் ஏரிப்பகுதியை பார்வையிட  மே முதல் செப்டம்பர் வரை நீளும் கோடை காலமே மிகச் சிறந்த காலமாகும். செடிகளிலும் மரங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். இடம் பெயரும் பறவைகள் இப்பகுதிக்கு வரத்தொடங்கும். ஏரியின் நீர் உறைந்திருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் இடங்களைப் பார்வையிட ஏதுவான இதமான மிதமான வெப்பநிலை இக்காலத்தில்தான் நிலவுகிறது. எனவே,இப்பகுதிக்கு சுற்றுலா வரவும் இயற்கை எழிலைக் கண்டு இன்புறவும், மே முதல் செப்டம்பர் வரையான கோடையில் வர பரிந்துரைக்கப்படுகிறது.

கோடைகாலம்

இக்காலத்தில் இங்கு வெப்பநிலையானது குறைந்தபட்சமாக 5°C முதல் அதிகபட்சமாக 40°C வரை நிலவும். இப்பகுதிக்கு சுற்றுலா வரவும் இயற்கை எழிலைக் கண்டு இன்புறவும், மே முதல் செப்டம்பர் வரை நீளும் கோடையில் வர பரிந்துரைக்கப்படுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் இப்பகுதியில் சொற்பமான மழைப்பொழிவு உள்ளது. இப்பகுதி மழை நிழல் பிரதேசமாகையால், மழைக்காலத்தில், சராசரியாக 15 சென்டிமீட்டர் மழைதான் பெய்கிறது. இக்காலங்களிலும் பயணிகள்  இப்பகுதிக்கு சுற்றுலா வரலாம்.

குளிர்காலம்

பாங்காங் பகுதியில், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில்  குறைந்தபட்ச வெப்பநிலை -14°C க்குக் கீழே பதிவாகிறது. அதிகபட்ச வெப்பநிலை 24°C க்கு மேல் செல்வதில்லை. இக்காலங்களில்,  இப்பகுதிக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டுவிடும். ஏரியின் நீர் உறைந்துவிடும். ஆகையால், இக்காலங்களில் இங்கு சுற்றுலா செல்வது உசிதமல்ல. இக்காலங்களில் இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவதைத் தவிர்க்கவேண்டும்.