Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பண்ணா » வானிலை

பண்ணா வானிலை

அக்டோபர், நவம்பர், பிப்ரவரி, மார்ஸ், ஏப்ரல் போன்ற மாதங்களில் பண்ணாவிற்கு சுற்றுலாச் செல்வது ஏற்புடையதாக இருக்கும். இங்க மாதங்களில், சுற்றுலாப் பயணிகளுக்காக, பண்ணா புலிகள் சரணாலயமும் திறந்திருக்கும். மிதமான வெப்பம் இருப்பதால், புலிகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களை காணும் வாய்ப்பு கிடைக்கும். அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாத இந்த மாதங்களில் பண்ணாவிற்கு சுற்றுலா செய்ய திட்டமிடுதல் சிறப்பானது.

கோடைகாலம்

பண்ணா நகரம் வெப்பமண்டலத்தில் அமைந்திருப்பதால், கோடை காலத்தில், குறிப்பாக மே மாதத்தில் அதிக அளவாக 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். மார்ச் முதல் மே வரை இங்கு கோடைகாலம். கோடைக்காலத்தில் வீசும் வெப்பக்காற்றிற்கு பலர் பலியாகியுள்ளனர்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பண்ணாவில் மழைக்காலம்.  ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நல்ல மழை பொழியும். மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால், போக்குவரத்துக்கு இடைஞ்சல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் பண்ணாவிற்கு செல்வதை தவிர்த்தல் நலம்.

குளிர்காலம்

நவம்பர் மாத இறுதியில் தொடங்கில், ஜனவரி வரை பண்ணாவில் குளிர் காலம். ஜனவரி மாதம் குளிர் மிக அதிகமாக இருக்கும்.  0 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்லுமாம். குளிர்காலங்களில், மதிய வேளை மிகவும் இதமாக இருக்கும். இரவில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த உச்ச கட்ட குளிரில் பண்ணாவிற்கு வருவதை தவிர்த்தல் நலம்.