Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » வானிலை

பவுரி வானிலை

பவுரி பகுதிக்கு சுற்றுலாச் செல்ல வேண்டும் என்றால், மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள காலத்தில் சென்று வரலாம். அப்போது பவுரியில்  இதமான தட்பவெப்ப நிலை நிலவும். அதனால் இயற்கை காட்சிகளை நன்கு கண்டு ரசிக்கலாம். குளிர்காலத்தில் இந்த பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால், இந்த காலத்தில் பவுரி பகுதிக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இங்கு கோடைகாலம் ஆகும். இந்த காலத்தில் பவுரி பகுதியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு மழைக் காலம் ஆகும். மழைக் காலத்தில் இந்த பகுதியில் மிதமான மழைப்பொழிவு இருப்பதோடு, 218 செமீ மழை அளவு அச்சயமங்களில் பதிவாகும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பவுரியில் குளிர் காலம் ஆகும். குளிர் காலத்தில் இங்கு அதிகமான குளிர் மற்றும் அதிகமான பனிப்பொழிவும் இருக்கும். ஜனவரி மாதத்தில் இந்த பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியசாக பதிவாகும்.