Search
  • Follow NativePlanet
Share

பென்ச் - வளம் கொழிக்கும் தாவரங்களும்! சுற்றித்திரியும் விலங்குகளும்!

10

பென்ச் சுற்றுலா புகழ் பெற முக்கிய காரணமாக விளங்குகிறது இங்குள்ள பென்ச் தேசிய பூங்கா/பென்ச் புலிகளின் காப்பகம். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா அதன் தாவரவளம் மற்றும் விலங்கின வளத்துக்கு புகழ் பெற்றது. ஜாமுன், டீக், லென்டியா, பலஸ், பிஜா, மஹுவா, குசும், செமல், மூங்கில் போன்ற பல வகையான பூண்டுத்தன்மையுடைய செடி கொடிகளை இங்கு காணலாம். கரடிக்குரங்குகள், புனுகுப் பூனைகள், கரடிகள், மான்கள், புலிகள், காட்டு நாய்கள், பன்றிகள், சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் இந்த பூங்காவில் இருக்கின்றன.

பென்ச் - வரலாற்றுப் பக்கங்களில் இருந்து ஒரு பார்வை!

இந்த பூங்காவிற்கு ஒரு பிரம்மாண்டமான வரலாறு உள்ளது. இந்த இடத்தின் வளமை மற்றும் இயற்கை புதையல்களை பற்றி ஐன்-ஐ-அக்பரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ருட்யர்ட் கிப்லிங் எழுதிய "ஜங்கிள் புக்" என்ற கதையின் இடங்கள் பென்ச் தேசியப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது.

பென்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

பச்டர் கிராமம், நேவ்கோன் தேசியப் பூங்கா, கன்ஹா தேசியப் பூங்கா, நாக்பூர் மற்றும் நாக்சிரா வழிப்பாட்டிடம் போன்ற அழகிய இடங்களை கொண்டுள்ளது பென்ச் சுற்றுலா. இந்த இடங்கள் அனைத்தும் பென்சுக்கு அருகில் தான் அமையப்பெற்றுள்ளன.

பச்டர் என்ற சின்ன கிராமம் பென்ச் துரியா கேட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே களிமண்ணில் இருந்து மண் பாண்டங்கள் செய்பவர்களை அதிகம் காணலாம். இங்கு செய்யப்படும் கைவினை பொருட்களின் அழகு நம்மை மயங்க வைக்கும். அதனை நம் வீட்டிற்கு வாங்கியும் செல்லலாம்.

பென்ச் தேசிய பூங்காவிற்கு அருகில் பல கிராமங்களை கொண்டுள்ளது பென்ச் சுற்றுலா. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் காண்ட் பழங்குடியினரின் மரபு மற்றும் பண்பாட்டினை பார்க்க முடியும்.

பென்ச்சிற்கு அருகில் இருக்கும் நேவ்கோன் தேசியப் பூங்கா மற்றும் நாக்சிரா வழிப்பாட்டிடம் மகாராஷ்டிராவில் உள்ள இயற்கை காடுகள் ஆகும். கன்ஹா தேசியப் பூங்கா பென்ச்சிலிருந்து 198 கி.மீ. தொலைவில் உள்ளது.

பென்ச் தேசியப் பூங்கா வருவதற்கு சிறந்த காலம்

சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவிற்கு அக்டோபர் 16-ஆம் தேதியிலிருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை வருகை தரலாம். பருவக்காலத்தில், அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்த பூங்கா மூடியிருக்கும்.

இந்த பூங்காவிற்கு வருகை தர சிறந்த காலமாக கருதப்படுவது பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. இந்த பூங்கா காலை 6 மணியிலிருந்து 10.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 3 மணிக்கு மறுபடியும் திறந்து 6 மணிக்கு மூடப்பட்டுவிடும்.

பென்ச்சுக்கு எப்படி எப்போது வருகை தரலாம்?

சுற்றுலாப் பயணிகள் பென்ச்சிற்கு ரயில், விமானம் மற்றும் தரை வழியாகவும் வரலாம். பென்ச்சுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி இரயில் நிலையமாகும்.

மிக அருகில் இருக்கும் விமான நிலையம் நாக்பூரில் உள்ள சோனெகோன் விமான நிலையமாகும். சியோனி பேருந்து நிலையம் தான் இதற்கு மிக அருகில் இருக்கும் பேருந்து நிலையம்.

இங்கிருந்து பென்ச்சுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் வந்தடையலாம். பென்ச்சுக்கு வருகை தர சிறந்த காலமாக கருதப்படுவது பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை.

பென்ச் சிறப்பு

பென்ச் வானிலை

சிறந்த காலநிலை பென்ச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பென்ச்

  • சாலை வழியாக
    பென்ச் தேசியப் பூங்காவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சியோனி பேருந்து நிலையம் தான் பென்ச்சுக்கு அருகில் இருக்கும் பேருந்து நிலையமாகும். இங்கிருந்து மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு சீரான தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பென்ச்சிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சியோனி இரயில் நிலையம் தான் இதற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம். இங்கிருந்து நாக்பூர் மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. இங்கிருந்து நாக்பூர் மற்றும் ஜபல்பூருக்கு சீரான இரயில் சேவைகள் உள்ளது. சியோனியிலிருந்து பென்ச்சுக்கு டாக்சி மூலமாக வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாக்பூரில் உள்ள சோனெகோன் விமான நிலையம் தான் பென்ச்சுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம். இது பென்ச்சிலிருந்து 132 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து புனே மற்றும் மும்பைக்கு சீரான விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பெஞ்ச்சை டாக்சி மூலமாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed

Near by City