Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பென்ச் » வானிலை

பென்ச் வானிலை

பென்ச் வருவதற்கு சிறந்த காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையாகும். ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தியாவிலுள்ள அனைத்து புலிகள் சரணாலயமும் மூடியிருக்கும் என்பதை சுற்றுலாப் பயணிகள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனால் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை இங்கு வந்தால் பெஞ்ச்சின் உண்மை அழகை அதன் தேசியப் பூங்காவில் கண்டு ரசிக்கலாம்.

கோடைகாலம்

பென்ச்சில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். கோடைக்காலத்தில் வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிகப்பட்ச வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். இந்த நேரத்தில் வெயில் உரைத்து தள்ளும். பென்ச் வருவதற்கு இது ஏற்ற காலம் கிடையாது.

மழைக்காலம்

பென்ச்சில் பருவக்காலம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் தென் மேற்கு பருவக்காற்றால் இங்கு அதிக அளவு மழை பெய்யும். மழையினால் வெளியில் சுற்றிப் பார்க்க செல்ல முடியாததால் இந்த காலத்தில் இங்கு வருவதும் உகந்தது அல்ல.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பென்ச்சில் குளிர் காலம் நிலவும். இந்த காலத்தில் குறைந்தபட்ச வானிலை உறையும் அளவிற்கு குளிராக  இருக்கும். அதிகப்பட்ச வானிலை 16 டிகிரி செசியஸ் வரை செல்லும். சுற்றுலாப் பயணிகள் கம்பளி ஆடைகளை தங்களுடன் கொண்டு வந்தால் இந்த காலத்தில் இங்கு வரலாம்.