சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் பருவநிலை அற்புதமாக இருக்கும் கோடைகாலங்களில் பெரன் நகரத்திற்கு வருவது சிறந்த அனுபவத்தை தருவதாக இருக்கும். இந்த மாவட்டத்தின் இயற்கையழகை அனுபவிக்க விரும்பினால் சுற்றுலாப் பயணிகள் வசந்த காலத்தில் வர வேண்டும். அக்டோபர் மாதத்தில் இந்த பகுதிக்கு நீங்கள் வந்தால் சகா-ங்கீ மற்றும் செகா காடி திருவிழாக்களையும் உங்களால் அனுபவித்திட முடியும்.
பெரன் மாவட்டத்தின் கோடைக்காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலம் உள்ளது. இந்த பருவம் மிகவும் இனிமையானதாக இருக்கும். இ;நநாட்களில் பெரன் நகரத்தின் வெப்பநில 18°C முதல் 25°C வரை இருக்கும். இந்நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழையால், இந்த பகுதியின் அழகு அதிகரித்து காணப்படும் என்பதில் ஐயமில்லை.
நாகாலாந்து மாநிலத்தின் பிற பகுதிகளைப் போலவே பெருவாரியான மழைப்பொழிவினை பெறும் இடமாக பெரன் நகரம் உள்ளது. இந்நாட்களில் அவ்வப்போது ஆலங்கட்டி மழையும் பெய்வதுண்டு. இந்த காலகட்டம் தான், பெரன் மாவட்டத்தின் காடுகளிலுள்ள மரங்கள் மற்றும் செடிகள் என அனைத்தும் முழுமையான வளமையுடன் காணப்படும் சிறந்த பருவமாகும்.
பெரன் மாவட்டத்தில் குளிர் காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதத்தின் இறுதி வரை நீடித்திருக்கும். மலைப்பாங்கான மாவட்டமாக இருப்பதால், இந்த பருவத்தில் பெரன் மாவட்டத்தில் கடும் குளிராக இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலையானது 5°C அளவிற்கு தொடர்ச்சியான நாட்களுக்கு குறைந்த விடும்.