Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பித்தோராகர் » வானிலை

பித்தோராகர் வானிலை

பித்தோராகர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள  விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது.  

கோடைகாலம்

( ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) : பித்தோராகர் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தின்போது அதிகபட்சமாக 20°C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 7°C வெப்பநிலையும் காணப்படுகிறது. பித்தோராகர் பகுதியை சுற்றிப்பார்த்து மகிழ இக்காலமே ஏற்றதாக காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை) : பித்தோராகர் பகுதியில் மழைக்காலமானது ஆகஸ்ட் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கிறது.  மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் மார்ச் வரை) : பித்தோராகர் பகுதியில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 4°C ல் துவங்கி 8°C  வரை வெப்பநிலை காணப்படும். இக்காலத்தில் கடுமையான பனிப்பொழிவும் இப்பகுதியில் நிலவுகிறது.