Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போச்சம்பல்லி » வானிலை

போச்சம்பல்லி வானிலை

போச்சம்பல்லி நகரை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : போச்சம்பல்லி நகரின் கோடை காலங்களில் 45 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும். அதோடு ஈரப்பதமும் அதிகமாக காணப்படுவதால் பயணிகள் கோடை காலத்தில் போச்சம்பல்லி நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : போச்சம்பல்லி நகரின் மழைக் காலங்களில் 35 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் போச்சம்பல்லி நகரில் மிதமானது முதல் கடும் மழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : போச்சம்பல்லி நகரின் பனிக் காலங்களில் 25 டிகிரிக்கு கீழே வெப்பநிலை செல்லாது. இந்தக் காலங்களில் குளிர்ச்சியை உணர முடியாவிட்டாலும் வெப்பநிலை மிகவும் இதமானதாக இருக்கும்.