Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொள்ளாச்சி » வானிலை

பொள்ளாச்சி வானிலை

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலம், பொள்ளாச்சி செல்வதற்கு உகந்த காலகட்டமாகும். மழைக்காலத்துக்குப் பின், இந்நகரம், மிகவும் பசுமையாகவும், அழகாகவும் காணப்படும். வானிலையும் மிகவும் ரம்மியமாக இருக்கும்.

கோடைகாலம்

பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான மற்றும் இனிமையான வானிலையே நிலவுகிறது. கோடைகால தட்பவெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ்க்கும், 35 டிகிரி செல்சியஸ்க்கும் இடையே இருக்கும். மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலமாகும்.

மழைக்காலம்

பொள்ளாச்சியில், ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை மழைக்காலமாகும். இக்காலகட்டத்தில், இந்நகரம் பசுமையாகவும், மிக்க அழகுடனும் காணப்படும். இது, இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

குளிர்காலம்

பொள்ளாச்சியில், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலமாகும். இக்காலகட்டத்தில், இங்கு தட்பவெப்பநிலை 22 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இச்சமயத்தில், வானிலை மிகவும் இதமாகவும், ரம்மியமாகவும் இருப்பதோடு, இந்நகரம் மிகவும் அழகாகவும் காணப்படும். இங்கு சென்று வருவதற்கு, இதுவே மிகச் சரியான காலகட்டமாகும்.