Search
  • Follow NativePlanet
Share

பொள்ளாச்சி – சந்தைகளின் சொர்க்கம்!

29

பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்

சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும்.

இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன.

நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

இந்நகரத்தின் வரலாறு

பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழம்பெருமை வாய்ந்த சுப்ரமண்யர் கோயில், இப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான கோயிலாகும். சரித்திரத்தின் ஏதோ ஒரு புள்ளியில், இக்கோயில் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது என்று நம்பப்பட்டது.

இவ்வூருக்கு, “வளமான அரசு ஆண்ட இடம்” என்று பொருள் தரும் வகையில் அமைந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரும் உண்டு. “பொள்ளாச்சி சந்தை” என்றழைக்கப்படும் இவ்வூர் சந்தை, வளமானது என்றும், சரித்திரப் பிரசித்தி பெற்றது என்றும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சிக்கு செல்வது எப்படி?

கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து, அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.

பொள்ளாச்சியின் வானிலை

பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும்.

பொள்ளாச்சி சிறப்பு

பொள்ளாச்சி வானிலை

சிறந்த காலநிலை பொள்ளாச்சி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பொள்ளாச்சி

  • சாலை வழியாக
    மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் டீலக்ஸ் பேருந்துகள், பொள்ளாச்சியிலிருந்து அருகாமையில் உள்ள, பல பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களான கோயம்புத்தூர், திண்டுக்கல், சென்னை ஆகியவற்றுக்கு இயக்கப்படுகின்றன. பேருந்துப் பயணம் வசதியாகவே இருக்குமாதலால், பேருந்துப் பயணமும் நல்ல தேர்வேயாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பொள்ளாச்சி இரயில் நிலையம், முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான இரயில்கள் பொள்ளாச்சி வழியாக செல்கின்றன. அதனால், இந்நகரம், மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆகையினால், பொள்ளாச்சி செல்வதற்கு இரயில் பயணமே சிறந்த தேர்வாகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பொள்ளாச்சியிலிருந்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோயம்புத்தூர் விமான நிலையமே, இந்நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையமாகும். விமான நிலையத்திலிருந்து, பொள்ளாச்சி செல்வதற்கு, ஏராளமான டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் உள்ளன. டாக்ஸி கட்டணம் சுமார் 600 ரூபாய் வரை இருக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat