Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்பந்தர் » வானிலை

போர்பந்தர் வானிலை

போர்பந்தர், மாறிக் கொண்டேயிருக்கும் தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ளது. கோடைகள் ஈரப்பதம் நிரம்பியவையாகவும், மழைக்காலங்கள் சில சமயம் கடுமையாகவும், சில சமயம் மிதமாகவும், கணிக்கவியலாததாக இருக்கக்கூடிய மழைப்பொழிவுகளுடன் காணப்படுகின்றன.   

கோடைகாலம்

போர்பந்தரில் கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருக்கும். கோடைகால மாதங்கள் மார்ச் மாதம் ஆரம்பித்து மே மற்றும் ஜூன் மாதங்கள் வரை நீடிக்கின்றன. இச்சமயத்தில் இங்கு வெப்பநிலை சுமார் 44 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். போர்பந்தர், இக்காலத்தின் போது பொதுவாக 40 டிகிரி செல்சியஸுக்கும் 23 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையுடன் காணப்படும்.

மழைக்காலம்

ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் போன்ற மாதங்கள், போர்பந்தரின் மழைக்கால மாதங்களாகும். இச்சமயத்தில் இங்கு பெய்யும் மழை கணிக்கவியலாததாக இருக்கும். போர்பந்தர், சில வருடங்கள் மிக அதிக மழைப்பொழிவைப் பெற்றாலும், சில வருடங்கள் மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறுகின்றது.

குளிர்காலம்

போர்பந்தரில் குளிர்காலம் அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து ஜனவரி மாதம் வரை நீடிக்கிறது. இச்சமயத்தில் இங்கு வெப்பநிலை சுமார் 10 டிகிரி செல்சியஸுக்கும், 36 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டிருக்கும். இச்சமயமே இங்கு சுற்றுப்பார்க்க உகந்த காலகட்டம் ஆகும்.