பிரபாஸ் கிரி ஒரு ஆன்மீகத் தலமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் இந்த பகுதிக்கு பக்தர்கள் ஏராளமான அளவில் வருகை தருகின்றனர். ஆனால் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலங்களில் இந்த பகுதிக்குச் செல்வதி மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த மாதங்களில், பிரபாஸ் கிரியின் வெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிரபாஸ் கிரியில் கோடைகாலம் நிலவுகிறது. இந்த காலத்தில் பிரபாஸ் கிரியில் கடுமையான வெப்பம் நிலவும் அதாவது 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த பகுதியில் பரவலாக மழை பெய்யும். இந்த காலத்தில் வெப்பநிலை சற்று ஈரப்பதமாகவும் அதே நேரத்தில் வெப்பச் சலனத்துடனும் காணப்படும்.
பிரபாஸ் கிரியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும். அதாவது 10 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக தட்பவெப்பநிலை பதிவாகும். அதே நேரத்தில் அதிகபட்சமாக 30 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை இருக்கும்