ஸ்ரீ நகரில் இருந்து புல்வாமா செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள இடங்களான ஜம்மு, சண்டிகர், லே, பாஹல்கம் மற்றும் டெல்லியிலிருந்து ஸ்ரீ நகருக்கு பேருந்துகளில் வர முடியும். மேலும் ஜம்மு காஷ்மீர் சாலைப் போக்குவரத்துக் கழகமும் (J&KSRTC) ஜம்முவிலிருந்தும், ஸ்ரீ நகரிலிருந்தும் புல்வாமா வசதியான பேருந்துகளை இயக்கி வருகிறது.