ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான நாட்கள் புல்வாமாவை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற நாட்களாகும். எனினும் மே மாதத்தை சற்று கவனத்துடன் அணுகுவது நல்லது.
ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் வெப்பமான கோடைக்காலத்தைப் பெறும் இடமாக புல்வாமா இருக்கிறது. இந்த நாட்களில் புல்வாமாவின் வெப்பநிலை 22C முதல் 35C வரை இருக்கிறது. வெளிப்புற விளையாட்டுகள் விளையாட ஏற்ற பருவமாக இது இருப்பதால் இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் நன்றாக சுற்றித் திரிய முடியும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் மே மாதத்தில் இங்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நலம்.
ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மாதங்களில் புல்வாமாவின் மழைக்காலம் நிலவி வருகிறது. இந்த மாதங்களில் புல்வாமா நல்ல மழையைப் பெறும் இடமாக உள்ளது. ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மழைக்காலத்திலும் புல்வாமாவிற்கு சுற்றுலா வரலாம்.
டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் முடியும் வரை நீடித்து, மிதமிஞ்சிய குளிரையும் மற்றும் ஜில்லென்ற பருவநிலையையும் பெற்றிருக்கும் புல்வாமாவில் குளிர்கால வெப்பிநிலை சில நேரங்களில் -5C வரை குறைந்து விடும். இந்நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 10C இருக்கும். வரவேற்கத்தகுந்த சூழ்நிலையாக இல்லாமல், கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுடன் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் இங்கு வருவது அரிது.