Search
  • Follow NativePlanet
Share

புனலூர் - தமிழ் மனம் வீசும் கேரள நகரம்!

10

புனலூர் பேப்பர் மில்ஸ் துவங்கப்பட்டதன் காரணமாக கேரளாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டதாக பிரபலமாக அறியப்படும் புனலூர் நகரம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் நீரமைந்த நகரம் என்ற பொருளில் புனலூர் என்று தமிழிலும், மலையாளத்திலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இதன் பெயருக்கேற்றபடி இந்த நகரில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கல்லடா எனும் நதி புனலூர் நகரின் செழுமைக்கும், வளமைக்கும் மூலகாரணமாக திகழ்ந்து வருகிறது.

புனலூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நுழைவாயிலாக கருதப்படும் பத்னபுரம் தாலுக்காவின் நிர்வாக தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் அமைந்திருக்கும் இந்த நகரம் தெற்கு கேரளாவின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.

புனலூர் நகரின் புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது தேசிய முக்கியத்துவத்தை பறைசாற்றும் நினைவுச் சின்னமாக 19-ஆம் நூற்றாண்டில் கட்டபட்ட தொங்கு பாலமே ஆகும்.

இந்த பாலம் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும் பாலத்தை பாதுகாக்க தேவையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

புனலூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தொங்கு பாலத்தை தவிர அகஸ்த்திய மலை எனும் காட்டுயிர் சரணாலயத்துக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம். மேலும் அன்னாசி பழம், பிளைவுட், டிம்பர், மிளகு போன்றவைக்காகவும் புனலூர் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.

இந்தியா முழுவதுமிருந்து சபரிமலை வருபவர்கள் புனலூர் நகரில் இளைப்பாறி செல்வதால் திருவிழா காலங்களில் புனலூர் நகரம் ஜேஜேவென்று இருக்கும். இந்த நகருக்கு நீங்கள் வரும்போது சேந்த்ருணி காடுகளுக்கும், தென்மலா ஈக்கோ டூரிசம் பகுதிக்கும் கண்டிப்பாக சென்று வர வேண்டும்.

இப்பகுதிகளில் நீங்கள் நெடுந்தூர நடைபயணம், மவுண்டெயின் பைக்கிங் போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

அதோடு பாலருவியும், பழைய குற்றாலமும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள். இவைதவிர புனலூர் நகருக்கு வரும்போது நீங்கள் பட்டாழி தேவி கோயிலுக்கும் சென்று வரலாம்.

புனலூர் சிறப்பு

புனலூர் வானிலை

சிறந்த காலநிலை புனலூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது புனலூர்

  • சாலை வழியாக
    கேரளாவின் நீளமான நெடுஞ்சாலையாக கருதப்படும் SH-8 சாலையில் புனலூர் நகரம் அமைந்திருக்கிறது. எனவே கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து சாலை மூலமாக எந்த சிரமமுமின்றி புனலூர் நகரை அடையலாம். அதோடு கொல்லம்-திருமங்கலம் NH-208 சாலை மூலமாகவும் புனலூர் நகரை நீங்கள் வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்லம்-மதுரை வழித்தடத்தில் புனலூர் நகரின் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. தற்போது இந்த வழித்தடத்தில் நான்கு முக்கிய ரயில்கள் கடந்து செல்கின்றன. மேலும் பிற்காலத்தில் இன்னும் சில ரயில் சேவைகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    புனலூர் நகரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினந்தோறும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக புனலூர் நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri