Search
 • Follow NativePlanet
Share

ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!

29

ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில் இணைக்கிறது பக்திபூர்.

ராஜ்கிர் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் உள்ளதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் கூரைகளாக எழில் கொஞ்சும் மலைகள் திகழ்ந்து வருகின்றன. ராஜ்கிர் நகரத்தில் புத்தரை பற்றியும் புத்த மதத்தை பற்றியும் எண்ணிலடங்கா கதைகள் பேசப்படுகின்றன.

ராஜ்கிர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

ராஜ்கிர் சுற்றுலாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது பிரம்மகுந்த். பிரம்மகுந்த் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வெந்நீர் ஊற்றாகும். இதை காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

கௌதம புத்தரும், மஹாவீரும் தங்கள் வாழ்க்கையின் அதிக நாட்களை இங்கே கழித்துள்ளதால் இந்த இடத்தை ஜெயின் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ராஜ்கிர் என்றால் ராஜக்ரிஹா என்று அர்த்தமாகும். அதாவது ராஜாவின் வீடு என்று பொருளாகும். இது ஜரசந்தா என்ற பேரரசரின் கதையையும் அவர் பாண்டவர்களிடம் நடத்திய போரை பற்றியும் விளக்கும். மேலும் கௌதம புத்தர் மற்றும் மஹாவீரரின் வாழ்க்கை பயணத்திற்கு சாட்சியாக விளங்குகிறது ராஜ்கிர்.

ஜெயின் மற்றும் புத்த மதத்தின் வளர்ச்சியை பற்றிய முக்கிய நிகழ்வுகளை வெளிக்காட்டும் அட்டவணையாக விளங்குகிறது ராஜ்கிர் சுற்றுலா. புத்த மதத்தின் அவை முதன் முதலாக கூடியது இங்குள்ள சப்ட்பர்னி குகையில் தான்.

புத்த மதத்தின் வளர்ச்சியும் புகழும் ராஜ்கிர்ரை புத்தமத செயல்பாடுகளின் மையமாக மாற்றியது. ஒட்டு மொத்த புத்தமத சுற்றுலா மண்டலத்துக்கும் ராஜ்கிர் சுற்றுலா ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது.

மேலும் இதர புத்த மத புனித ஸ்தலங்களுடன் இணைப்பில் உள்ளது. நலந்தாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கிர் நகரம், புத்தமதத்தின் மற்றொரு புனித ஸ்தலமாகும்.

ராஜ்கிர்ரின் திருவிழாக்கள்!

ராஜ்கிர் நடன மஹோத்சவா திருவிழா தான் ரஜ்கிர்ரில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாகும். ராஜ்கிர் மக்கள் இத்திருவிழாவை பக்தி பாடல்கள், வாத்திய இசை, நாட்டுப்புற நடனம், நாடகங்கள் மற்றும் மரபுசார்ந்த நடனங்களுடன் ஆத்மபூர்வமாக கொண்டாடுவார்கள்.

பௌஸ் மாதம் முடியும் போது ஜனவரி 14-ஆம் தேதியை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது புனித நீராடி இனிப்பு கொடுத்து மகிழ்வார்கள் மக்கள்.

மற்றொரு முக்கியமான திருவிழாவாக விளங்குகிறது மலமாசா மேகா. இது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.

ராஜ்கிர்ரின் வானிலை

ராஜ்கிர்ரில் கோடைக்காலம் இளஞ்சூடாகவும், குளிர் காலம் லேசான குளிருடனும் இருக்கும். அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் ராஜ்கிர்ருக்கு சுற்றுலா வருவதே உகந்த பருவமாகும்.

ராஜ்கிர்ரை அடைவது எப்படி?

ராஜ்கிர்ரில் இரயில் நிலையம் இருக்கிறது, ஆனால் விமான நிலையம் கிடையாது. அதனால் இங்கு வருவதற்கு முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. சாலை வழியாக இங்கு வரும் பாதையும் நன்றாகவே உள்ளது.

ஓய்வெடுக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது ராஜ்கிர். இயற்கை வளத்துடன் இருக்கும் ராஜ்கிர், இன்றைய நவீனமயமாக்களின் பாதிப்பின்றி திகழ்வது தனிச் சிறப்பு.

அமைதியாக ஓய்வெடுத்து உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கே வெந்நீர் ஊற்றான பிரம்மகுந்த் இருப்பதால் இது குளிர்கால ரிசார்டாகவும் விளங்குகிறது.

ராஜ்கிர் சிறப்பு

ராஜ்கிர் வானிலை

ராஜ்கிர்
37oC / 99oF
 • Haze
 • Wind: WSW 15 km/h

சிறந்த காலநிலை ராஜ்கிர்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ராஜ்கிர்

 • சாலை வழியாக
  ரஜ்கிர்ரில் பயணம் புரிய பேருந்து, டாக்சி அல்லது டோங்காவை பயன்படுத்தலாம். ராஜ்கிர்ரிலிருந்து பாட்னா 93 கி.மீட்டரிலும், நலந்தா 12 கி.மீட்டரிலும், கயா 71 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  ராஜ்கிர்ரில் ஒரு இரயில் நிலையம் உள்ளது. இருப்பினும் இங்கிருந்து சரியான இணைப்புகள் இல்லாததால் அதற்கு அருகில் 70 கி.மீ. தொலைவில் இருக்கும் கயா இரயில் சந்திப்பை பயன்படுத்தலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  ரஜ்கிர்ரில் விமான நிலையம் கிடையாது. அதனால் அதற்கு அருகில் 110 கி.மீ. தொலைவில் பாட்னாவில் இருக்கும் விமான நிலையத்தை பயன்படுத்தலாம். இந்த விமான நிலையத்திலிருந்து பல முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Oct,Thu
Return On
25 Oct,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
24 Oct,Thu
Check Out
25 Oct,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
24 Oct,Thu
Return On
25 Oct,Fri
 • Today
  Rajgir
  37 OC
  99 OF
  UV Index: 9
  Haze
 • Tomorrow
  Rajgir
  32 OC
  90 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Rajgir
  33 OC
  92 OF
  UV Index: 10
  Sunny