Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணக்பூர் » வானிலை

ரணக்பூர் வானிலை

ரணக்பூர் கிராமத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் குளிர் காலமாகும். இக்காலத்தில் பருவநிலை இனிமையானதாகவும் சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாகவும் உள்ளது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை):ரணக்பூர் பகுதியில் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 22° C முதல் 42° C காணப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிக வெப்பமும் வறட்சியும் நிலவுவதுடன் மே மாதத்தில் இப்பகுதி கடும் உஷ்ணத்தைப் பெறுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை):ரணக்பூர் பகுதியில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் குறைவான மற்றும் தொடர்ச்சியற்ற மழைப்பொழிவையே இப்பகுதி பெறுகிறது. இருப்பினும் இக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை):ரணக்பூர் பகுதிடிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 10° C யிலிருந்து 20° C வரை நிலவுகிறது. குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவே உள்ளதால் பயணிகள் இதமான குளிர் ஆடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.