Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராணிக்கேத் » வானிலை

ராணிக்கேத் வானிலை

ராணிக்கேத் சுற்றுலாஸ்தலத்துக்கு வர விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. மழைக்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

( மார்ச் முதல் மே மாதம் வரை) : ராணிக்கேத் பகுதியில் மார்ச் முதல் மே மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தின்போது அதிகபட்சமாக 22°C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 8°C வெப்பநிலையும் காணப்படுகிறது.

மழைக்காலம்

( ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : ராணிக்கேத் பகுதியில் மழைக்காலமானது ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது.  சராசரியான மழைப்பொழிவு இங்கு மழைக்காலத்தில் நிலவுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : ராணிக்கேத் பகுதியில் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 3°C ல் துவங்கி 7°C  வரை வெப்பநிலை காணப்படும். இக்காலத்தில் கடுமையான பனிப்பொழிவும் இப்பகுதியில் காணப்படுகிறது.