ரத்னகிரிப்பகுதி புவியியல் அமைப்புப்படி கடற்கரைப்பிரதேச பருவநிலையை வருடம் முழுதும் பெற்றுள்ளது. டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலமே ரத்னகிரிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.
மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தில் ரத்னகிரி நகரம் கடுமையான பொசுக்கும் வெப்பத்துடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 38°C வரை இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
ஜுனில் துவங்கி செப்டம்பரில் முடிவடையும் மழைக்காலத்தில் ரத்னகிரிப்பகுதி நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் ரத்னகிரிப்பகுதியின் சுற்றுப்புறம் பசுமையாக விளங்குவதுடன் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பி எழிலுடன் காட்சியளிக்கின்றன.
ரத்னகிரிப்பகுதியில் குளிர்காலம் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நிலவுகிறது. இக்காலத்தில் ரத்னகிரி மிக இனிமையான ஒரு சூழ்நிலையுடன் விரும்பத்தக்கதாக திகழ்கிறது குளிர்காலத்தில் வெப்பநிலை 13°C வரை குறைந்து காணப்படுகிறது.