ரேவா நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பைரோம் பாபாவின் சிலை. மிகவும் புனிதமாக கருதப்படும் இவ்விடத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
குர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிலையை, அங்குள்ள மக்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இங்கு வந்து வழிபட்டால், பக்தர்களில் அனைத்து குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள ஏரியில் குளித்தால், பல்வேறு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குண்மாகும் என்று நம்புகின்றனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் மகாசிவராத்திரியன்று, மிகப் பெரிய திருவிழாவும் நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications