மத்திய பிரதேசத்தில் இருக்கும் உயரமான நீர்வீழ்ச்சிகளில் சாச்சாய் நீர்வீழ்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. சுமார் 130 மீ உயரத்தில் இருந்து இந்நீர்வீழ்ச்சி விழுகிறது. தம்சா ஆற்றின் துனை ஆறான பிஹாத் ஆற்றில் இருந்து தான் சாச்சாய் நீர்வீழ்ச்சி தோன்றியது.
இந்த அருவி, மிக உயரத்தில் இருந்து கீழே விழுந்து, சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ரேவா மாவட்டத்தில் இருந்து 46 கிமீ தொலைவில் இருக்கும் சாச்சாய் நீர்வீழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான, உயரமான நீர்வீழ்ச்சி. சாச்சாய் நீர்வீழ்ச்சி, புகழ்பெற்ற சித்ரகூட் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications