மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில் இருக்கும் கோவிந்த்கர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் பெரிதும் கவர்ந்துள்ளது. ரேவாவை ஆட்சு புரிந்த மகாரஜரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, கோடை காலத்தின் தலைநகராக திகழ்ந்திருக்கிறது. எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோவிந்த்கர் கோட்டையை சுற்றி பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு மத்தியபிரதேச அரசு, இந்தக் கோட்டையை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்தக் கோட்டையை சிறப்புமிக்க தங்குமிடமாக மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது.
கோவிந்த்கர் கோட்டையின் அழகைப் பராமரிக்க, தனியார் நிறுவனமும், மத்தியபிரதேச அரசும் பெரும் தொகையை செலவு செய்திருக்கின்றன. மேலும், ஷாருக்கான் நடித்த அசோகா படத்தில், இங்கிருக்கும் அருங்காட்சியகப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications