1882-ஆம் ஆண்டு, ரேவாவை ஆட்சு புரிந்த மகாராஜர், கட்டிய அரண்மனை கோவிந்த்கர் அரண்மனை. ரேவா நகரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் இருக்கும் இந்த அரண்மனையைச் சுற்றி கியோந்தி, சாச்சை, பச்சூத்தி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. பிஹாத் மற்றும் பிச்சியா ஆறுகள் இங்கு தான் ஒன்று கூடுகிறது.
இந்த அரண்மனையில், பூமிக்கடியில் ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. ரேவா அரசரின் ரகசிய பாதையாக பயன்பட்டிருக்கிறது. சவ்வந்தித் திருக்கோவில், ஹனுமான் திருக்கோவில் என இந்த அரண்மனையைச் சுற்றிப் பல கோவில்கள் உள்ளன.
கோவிந்த்கர் ஏரிக்கரையில் இந்த அரண்மனை அமைந்திருக்கிறது. கோவிந்த்கர் ஏரியை பகேலா அரசர்கள் உருவாக்கினார்கள் என்பது கூடுதல் தகவல். கோவிந்த்கர் அரண்மனையில், வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.
1952 இல் பிடிபட்ட வெள்ளைப் புலியை, முதன் முதலாக இந்த மியூசியத்தில் தான் வைத்திருந்தார்கள். அந்த வெள்ளைப் புலிக்கு மோகன் என பெயரிட்டு மகிழ்கின்றனர் அந்த ஊர் மக்கள்.



Click it and Unblock the Notifications