கியோந்தி நீர்வீழ்ச்சி, நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள லால்கோன் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில், கியோந்தி நீர்வீழ்ச்சி 24 ஆம் இடத்தில் உள்ளது.
இயற்கை எழில் நிறைந்த பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல பெரிதும் விரும்புகின்றனர். தம்சா ஆற்றின், துணை ஆறான மஹானா ஆற்றில் இருந்து கியோந்தி நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.
சுமார் 98 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. உள்ளூர் மக்கல் இவ்விடத்தை புனிதமாக கருதி, தினந்தோறும் பூஜை வழிபாடு செய்கின்றனர். நீர்பாசனம், விவசாயம் மற்றும் குடிநீருக்காக இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications