பூர்வா நீர்வீழ்ச்சி, ரேவா மாவட்டத்தில் இருக்கும் மற்றுமொரு அழகிய நீர்வீழ்ச்சி ஆகும். சுமார் 70 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிது கவர்ந்திழுக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருப்பதால், பூர்வா நீர்வீழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். டன்ஸ் ஆற்றிலிருந்து தோன்றிய இந்த நீர்வீழ்ச்சி, ரேவா பகுதியின் வடக்கே பாய்கிறது.
குறிப்பாக, குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால், இந்த சமயத்தில் பல்வேறு கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. புகழ்பெற்ற சித்ரகூட் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பூர்வா நீர்வீழ்ச்சியை, வெப்பம் தணிந்து குளிராக இருக்கும் மார்ச்-மே மாத காலங்களில் சுற்றுலாப் பயணம் செய்வது சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications