ரேவா நகரத்தில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ராணிபூர் கர்ச்சூலியான். இந்த இடம், தேசிய நெடுஞ்சாலை 7 இல், ரேவாவில் இருந்து அலகாபாத் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. முன்பொரு காலத்தில் இந்த இடம் தாசில்தார் தலைமையகமாக இருந்திருக்கிறது.
18 ஆம் நூற்றாண்டில், கல்ச்சூரி அரசர்கள் இவ்விடத்தை ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டு கட்டிடக் கலையின் சிறப்புக்களை விளக்குவதாக அமைந்திருக்கிறது ராணிபூர் கர்ச்சூலியான்.
கல்ச்சூரி அரசர் இவ்விடத்தை ஆட்சி செய்ததால் ராணிபூர் கர்ச்சூலியான் என பெயர் வந்தது. பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரும் இவ்விடத்தை மத்திய பிரதேச அரசு சிறப்பாக பராமரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications