ரேவா மாவட்டத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ஷாப்பிங்க வளாகம் ஷில்பி ப்ளாசா. மத்தியபிரதேசத்தில் இருக்கும் பெரிய ஷாப்பிங் வளாகங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது ஷில்பி ப்ளாசா.
ரேவா ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த வளாகம் உள்ளூர் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. குறைவான விலையில், தரமான பொருட்கள் கிடைப்பதால் ஷில்பி ப்ளாசாவில் ஷாப்பிங்க் செய்வது ஒரு இன்பமான அனுபவமாக இருக்கிறது.
அனைத்து விதமான கடைகளைக் கொண்டுள்ள இந்த வளாகத்தில், பல்வேறு பிராண்டு பொருட்களும் கிடைக்கிறது. மேலும், ஷில்பி ப்ளாசா உள்ளூர் மக்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கித் தருகிறது.



Click it and Unblock the Notifications