Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவா » வானிலை

ரேவா வானிலை

கோடையில் வெயில் கொளுத்தும், மழைக்காலத்தில் மழை நம் பயண திட்டத்தைத் தாமதப்படுத்தலாம். ஆகையால், குளிர்காலத்தில் ரேவாவிற்கு செல்வது சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

கோடைகாலத்தில், ரேவா நகரில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிகபட்சம் வெப்பமாக 44 டிகிரி வரை பதிவாகும். இவ்வளவு வெப்பமான காலத்தில், ரேவா நகரை சுற்றுலாப் பயணம் செய்வதை தவிர்த்தல் நலம்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை ரேவா நகரில் மழைக்காலம். இந்தக்காலத்தில் ரேவா நகரில், மிதமான அல்லது நல்ல மழை பொழியும். வெப்பம் குறைவாக இருப்பதால், இந்த சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் ரேவா செல்லலாம். இருப்பினும், அதிக மழை காரணமாக, உங்கள் சுற்றப்பயண திட்டம் பாதிக்கப்படலாம். மழைக்காலத்திற்கு ஏற்ப குடை மற்றும் உடைகளை எடுத்து செல்வது சிறப்பாக இருக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ரேவாவில் குளிர்காலம். குறைந்தபட்சமாக 12 டிகிரியும், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும் குளிர் இருக்கும். ரேவாவின் அழகை ரசிக்கு இது மிகவும் ஏற்ற காலம்.