Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தக் » வானிலை

ரோஹ்தக் வானிலை

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நிலவுகிறது. இக்காலத்தில் சராசரியாக 25°C  முதல் 44°C  வரை வெப்பநிலையை இப்பகுதி பெறுகிறது. குறிப்பாக மே மாதம் அதிக உஷ்ணத்துடன் காணப்படும். சில சமயம் ஜூன் மாதத்தின் பாதி வரை கூட கோடைக்காலம் நீளக்கூடும். 

மழைக்காலம்

ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. மேலும் மழைக்காலத்தில் ஈரமான சூற்றுப்புறம் மற்றும் காற்றில் ஈரப்பதம் நிரம்பிய இறுக்கமான சூழல் ஆகியவற்றோடு ரோஹ்தக் நகர்ப்பகுதி காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

ரோஹ்தக் நகரம் குளிர்காலத்தில் இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 9°C  தொடங்கி  25°C  வரை நிலவுகிறது.  நவம்பர் மாதம் துவங்கி மார்ச் வரை நீடிக்கும் இந்த குளிர்காலத்தில் ரோஹ்தக் நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.