Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரநாத் » வானிலை

ருத்ரநாத் வானிலை

வசதியான மற்றும் மகிழ்ச்சிகரமான, சுற்றிப் பார்க்கத் தகுந்த பருவநிலை நிலவும் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் ருத்ரநாத்திற்கு வருகை தரலாம்.

கோடைகாலம்

ருத்ரபிரயாகையில் கோடைக்காலம் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதங்களில் நிலவி வருகிறது. இந்நாட்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளாக முறையே 17°C மற்றும் 13°C ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற பருவமாக இது உள்ளது.

மழைக்காலம்

ருத்ரநாத்தில் செப்டம்பர் மாதம் துவங்கும் மழைக்காலம் நவம்பர் மாதம் முடியும் வரை நீடித்திருக்கிறது. இந்நாட்களில் குறைவான மழைப்பொழிவையே இந்த பிராந்தியம் பெறுவதால், இவ்விடத்தின் இயற்கையழகு மிகவும் பார்க்கத்தகுந்ததாக இருக்கும்.

குளிர்காலம்

ருத்ரபிரயாகையில் குளிர்காலம் டிசம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை நீடித்திருக்கிறது. பருவநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் இக்காலத்தில், ருத்ரபிரயாகையின் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாக சென்று விடும். மேலும், குளிர்காலத்தில் அதிகமான பனிப் பொழிவினை பெறும் இடமாகவும் ருத்ரபிரயாகை உள்ளது.