ருக்காலா பகுதியில் உள்ள ஆப்பிள் மற்றும் பிளம் பழத்தோட்டங்கள் இப்பிரதேசத்தின் முக்கிய கவர்ச்சி அம்சமாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளன. ராயல், கோல்டன் மற்றும் கிரான்னி ஸ்மித் போன்ற ஆப்பிள் பழவகைகளின் விளைச்சல் மற்றும் ஏற்றுமதிக்கு இந்த ருக்காலா பகுதி புகழ் பெற்று விளங்குகிறது.
சர்வதேச அளவில் இந்த ஆப்பிள் வகைகள் மணம், நிறம் மற்றும் சுவைக்கு புகழ் பெற்றுள்ளன. பழங்கள் அறுவடை செய்யப்படும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் இந்த பழத்தோட்டங்களுக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.
பழத்தோட்டங்களின் நடந்து திரியும் அற்புத அனுபவம் மற்றும் பிக்னிக் மட்டுமல்லாது இப்பகுதியில் கிடைக்கும் ஒரு சுவையான கேக் வகைகயையும் பயணிகள் ருசிக்கலாம். கோதுமை மாவு, பயறுவகைகள், சிறிது ஒபியம் விதை மற்றும் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கேக் ‘சிட்கூ’ என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications