ருக்காலாவிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள கியாரி கோயில் இப்பகுதியின் முக்கியமான ஆன்மீக அம்சமாக புகழ் பெற்றுள்ளது. துர்க்கா தேவிக்கான இந்த கோயில் 300 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.
மேலும் இது மடாலய பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. துர்க்கை விக்கிரகத்திற்கு அருகிலேயே லங்கரா வீர் சிலையும் உள்ளது.
இந்த கோயில் ஸ்தலத்தை சுற்றிலும் பரந்து கிடக்கும் கன்னிமை மாறாத இயற்கை எழில் பயணிகளை வெகுவாக கவர்கிறது. ருக்காலா பிரதேசத்தின் வனப்பகுதியை ஊடுறுவி செல்லும் மலையேற்றப்பாதையின் வழியாக பயணிகள் இந்த கோயிலை சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications