சஹரன்பூர் செல்ல தகுந்த காலம் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆகும். ஏனெனில் இந்த காலத்தில் சஹரன்பூரின் வெப்பநிலை சற்று இதமாக இருக்கும். ஒருவேளை வெயிலின் உக்கிரத்தை தாங்க முடிந்தால் கோடை காலத்தில்கூட சஹரன்பூருக்கு சென்று வரலாம்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சஹரன்பூரில் கோடைகாலம் நிலவுகிறது. இந்த காலத்தில் குறிப்பாக மே மாதத்தில் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும்.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் ஆகும். இந்த காலத்தில் சஹரன்பூரில் அதிகமான மழைப் பொழிவு இருக்கும். அதோடு இந்த காலத்தில் கருமையான மேகங்கள் சூழந்திருக்கும். மேலும் வெப்பநிலை ஈரப்பதத்துடனும் அதே நேரத்தில் வெப்பச் சலனத்துடனும் இருக்கும்.
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சஹரன்பூர் பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் வெப்பநிலை சற்று இதமாகவும் அதே நேரத்தில் இனிமையாகவும் இருக்கும். அதாவது குளர்காலத்தில் சஹரன்பூரின் வெப்பநிலை 12 டிகிரி செல்சியசிலிருந்து 20 டிகரி செல்சியஸ் வரை இருக்கும்.