Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சக்லேஷ்பூர் » வானிலை

சக்லேஷ்பூர் வானிலை

மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா பருவங்களிலும் சக்லேஷ்பூர் நகருக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளலாம். மழைக்காலத்தில் வெளிச்சுற்றுலா மற்றும் மலையேற்றம் போன்றவை கடினமானதும் அபாயகரமானதும் ஆகும்.

கோடைகாலம்

(ஏப்ரல் – மே): கோடைக்காலத்தில் சக்லேஷ்பூர் நகரம்  மிகுந்த உஷ்ணத்துடன் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பகலில் 40° C ஆகவும் அதே சமயம் இரவில் வெப்பநிலை 22° C என்ற அளவில் குறைந்தும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூன் – செப்டம்பர்): மழைக்காலத்தில் தென்மேற்குப்பருவ மழை காரணமாக சக்லேஷ்பூர் பகுதியில் கடும் மழைப்பொழிவு உள்ளது . மலை ஏற்றத்தில் ஈடுபடுவதோ வெளியில் சுற்றிப்பார்ப்பது இக்காலத்தில் சிரமமாக இருப்பதால் பயணிகள் மழைக்காலத்தை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர்  – டிசம்பர்): குளிர் காலத்தில் சக்லேஷ்பூர் நகரின் பருவ நிலை மிக விரும்பத்தக்கதாகவும் இனிமையாகவும் விளங்குகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 10° C முதல் 32° C வரை காணப்படுகிறது. குளுமையும் இனிமையும் நிறைந்த இக்காலத்தில் பயணிகள் சக்லேஷ்பூருக்கு விஜயம் செய்யலாம்.