Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லி » வானிலை

சாங்க்லி வானிலை

சாங்க்லி பகுதியானது பெரும்பாலும் மித வறண்ட மற்றும் வறண்ட பருவநிலையை வருடமுழுதும் பெற்றுள்ளது. குளிர்காலமே சாங்க்லி நகருக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

பிப்ரவரி மாதத்தின் பாதியிலிருந்து ஜூன் மாத பாதி  வரை நிலவும் கோடைக்காலத்தில் சாங்க்லி சுற்றுலாஸ்தலம் கடுமையான வெப்ப நிலையைக் கொண்டதாக உள்ளது. ஈரப்பதம் காணப்படுவதில்லை. இக்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை 38°C  முதல் 32°C வரை இருக்கும். குறிப்பாக மே மாத த்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தில் இப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வது உகந்ததல்ல.

மழைக்காலம்

கோடை வெப்பத்திற்குப்பின் கணிசமான மழைப்பொழிவை கொண்டுவரும் மழைக்காலமானது சாங்க்லி சுற்றுலாஸ்தலத்தில் வரவேற்கப்படுகிறது. இங்கு மழைக்காலம் ஜுனில் துவங்கி அக்டோபரில் முடிவடைந்தாலும் ஜுலை மாத வாக்கில் சாங்க்லி நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. வெப்பநிலை இக்காலத்தில் பொதுவாக 30°C  வரை உள்ளது. பின் மழைக்காலமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் உள்ளன.

குளிர்காலம்

சாங்க்லி சுற்றுலாஸ்தலத்தில் குளிர்காலம் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நிலவுகிறது. வெப்பநிலை 13°C முதல் 30°C வரை இருக்கும். எனவே இக்காலத்தில் இப்பகுதி மிக இனிமையான ஒரு சூழ்நிலையுடன் விரும்பத்தக்கதாக திகழ்கிறது.